[X] Close

அமெரிக்கா: வரலாறு காணாத வெப்ப அலையில் சிக்கி 200 பேர் மரணம்

உலகம்

Record-breaking-heatwave-in-US-kills-nearly-200-people

கடந்த வாரம் அமெரிக்காவின் பசிபிக் வடமேற்கு பகுதிகளில் தாக்கிய வெப்ப அலை காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 200 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

இந்த வெப்ப அலை காரணமாக அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் 116 பேரும், வாஷிங்டனில் 78 பேரும் உயிரிழந்துள்ளனர். வரலாறு காணாத இந்த வெப்ப அலைகளின்போது, நாடு முழுவதும் பல பகுதிகளில் வெப்பநிலை 115 ° பாரன்ஹீட்டை (46 ° செல்சியஸ்) தாண்டின என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவித்தன.

மேலும், "அமெரிக்காவில் வெப்ப அலை காரணமாக உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது துயரமானது. தற்போது தட்பவெப்பநிலை மாறிக்கொண்டே இருக்கிறது. அதன் காரணமாகவே பல வியத்தகு வானிலை நிகழ்வுகள், பெரிய வெள்ளம், காட்டுத் தீ போன்ற பல இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன" என அமெரிக்க வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


Advertisement

image

ஒரேகான் மாகாணத்தில் ஏற்பட்ட பெரும்பாலான இறப்புகள் போர்ட்லேண்டின் மல்ட்னோமா கவுண்டியில் நிகழ்ந்தன. உயிரிழந்த பலரின் வீட்டில் ஏர் கண்டிஷனிங் அல்லது மின்விசிறிகள் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

"பசிபிக் வடமேற்கு பகுதியில் ஏற்பட்டிருக்கும் கொடிய வெப்ப அலைகளால் மனிதர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. கனடாவின் பசிபிக் கடற்கரையில் 1 பில்லியனுக்கும் அதிகமான கடல் விலங்குகள் கடந்த வாரம் வெப்ப அலைகளால் இறந்திருக்கலாம். இந்த வெப்பம் கடல் வாழ்விலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுஎன பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் கடல்வாழ் உயிரியலாளர் கிறிஸ்டோபர் ஹார்லி தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close