[X] Close

திருப்பூர்: கடித்த பாம்புடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த சகோதரர்களால் பரபரப்பு

தமிழ்நாடு

Tiruppur-Youths-who-came-to-the-hospital-for-treatment-with-a-snake-bite-caused-a-stir

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு தன்னைக் கடித்த பாம்பை உயிருடன் பிடித்து வந்த சகோதரர்களால் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சந்தைப்பேட்டை பகுதியில் வசித்து வரும் அர்ஜூனன் (31), கோபால் (23). அண்ணன் தம்பிகளான இவர்கள் அதே பகுதியில் தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர். இருவரும் நேற்று வழக்கம்போல சந்தை பேட்டையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சாக்கு பைகளை லாரியில் ஏற்றி கொண்டிருந்தனர்.

image


Advertisement

அப்போது சாக்கு பையில் இருந்த 5-1/2 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு கோபாலின் கையில் கடித்தது. இதனைப் பார்த்த அர்ஜூனன் பாம்பை விரட்டிச் சென்று அடிக்க முயன்றபோது அவரையும் பாம்பு கடித்தது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் பாம்பை அடித்து லேசான காயத்துடன் உயிரோடு கையில் பிடித்தபடி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர்.

பாம்பை கையில் பிடித்தபடி அரசு மருத்துவமனைக்கு வந்த இருவரையும் பார்த்த சக நோயாளிகளும் சிகிச்சைபெற வந்தவர்களும் அச்சத்தில் அலறி அடித்து ஓடினர். இதன் பின் சிகிச்சை பெற்ற இருவரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


Advertisement

Advertisement
[X] Close