ஜூன் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் மொத்த வசூல் ரூ.92,849 கோடியாக உள்ளது. இதில், மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூ.16,424 கோடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூ.20,397 கோடி, ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ரூ.49,079 கோடி (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ரூ.25,762 கோடியையும் சேர்த்து) மற்றும் செஸ் வரி ரூ 6,949 கோடி (சரக்கு இறக்குமதிகளின் மூலம் வசூலான ரூ.809 கோடி உட்பட) ஆகும்.
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை காரணமாக ரூ.5 கோடி வரையிலான வர்த்தகமுள்ள வரி செலுத்துவோருக்கு, 2021 ஜூன் மாதத்திற்கான வரி விவரங்களை தாக்கல் செய்வதற்கான தாமதக் கட்டண தள்ளுபடி / வட்டி குறைப்பு (15 நாட்களுக்கு) உள்ளிட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 5 முதல் ஜூலை 5-ஆம் தேதி வரை உள்நாட்டு பரிவர்த்தனைகளில் வசூலான சரக்கு மற்றும் சேவை வருவாயும் மேல் குறிப்பிட்ட இலக்கங்களில் அடங்கியுள்ளன.
வழக்கமான பைசலாக ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து மத்திய சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ.19,286 கோடியையும், மாநில சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூ.16,939 கோடியையும் இந்த மாதத்தின்போது அரசு வழங்கியது.
கடந்த வருடத்தின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில், சரக்கு மற்றும் சேவை வரியின் வருவாய் இந்தாண்டு ஜூன் மாதம் 2% அதிகமாக உள்ளது. தொடர்ந்து எட்டு மாதங்களாக ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாய் ஈட்டப்பட்ட நிலையில், 2021 ஜூன் மாதத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கும் குறைவாக வசூலாகியுள்ளது.
ஜூன் மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி வசூல், நடப்பாண்டு மே மாதம் மேற்கொள்ளப்பட்ட வர்த்தக பரிவர்த்தனைகளுடன் தொடர்புடையது. கொரோனா தொற்றினால் மே மாதம் பெரும்பாலான மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் முழு அல்லது பகுதி நேர பொது முடக்கத்தைக் கடைப்பிடித்தன. ஏப்ரல் மாதத்தின் 5.88 கோடி மின்னணு வாயிலான விலைப்பட்டியலை விட 30% குறைவாக, மே மாதத்தில் 3.99 கோடி விலைப்பட்டியல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்