[X] Close

கேரளா: விளையாட்டால் நடந்த விபரீதம்; பச்சிளம்குழந்தை உட்பட மூவர் உயிரிழப்பு

இந்தியா,வீடியோ ஸ்டோரி

கேரளாவில் இளம்பெண்களின் விளையாட்டுத் தனமான நடவடிக்கை விபரீதத்தில் முடிந்துள்ளது. போலி ஃபேஸ்புக் பக்கம் தொடங்கி, உறவுக்கார பெண்ணை விளையாட்டாக ஏமாற்ற முயற்சித்ததால் தற்போது மூன்று உயிர்கள் பறிபோயுள்ளன.


Advertisement

கேரளா மாநிலம் கொல்லம் அருகே உள்ள கல்லுவாதுக்கல் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை ஒன்று புதருக்குள் கிடந்துள்ளது. குழந்தையை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. குழந்தையை வீசிச் சென்றது யார் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர். அதற்காக குழந்தை கிடந்த இடத்திற்கு அருகே இருந்தவர்களின் டி.என்.ஏக்கள் பரிசோதனை செய்யப்பட்டது. விசாரணையில் ரேஷ்மா என்ற பெண்ணின் டி.என்.ஏ, குழந்தையின் டி.என்.ஏ வுடன் ஒத்துபோனது. இதையடுத்து ரேஷ்மாவை கைது செய்த காவல்துறையினர், கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கினர். அப்போதுதான் விசாரணையில் அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறின.

தான் பெற்றெடுத்த இரண்டாவது குழந்தையை, வீசிச் சென்றதை ஒப்புக் கொண்ட ரேஷ்மா, ஃபேஸ்புக் காதலுக்காக இக்கொடூரத்தை நிகழ்த்தியதாவும் கூறியுள்ளார். ரேஷ்மாவின் கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், ஃபேஸ்புக் மூலமாக முகம் தெரியாத அனந்து என்ற பெயரில் இருக்கும் நபருடன் ரேஷ்மா பழகி வந்துள்ளார்.


Advertisement

அனந்து என்ற பெயரில் இருந்த நபருடன் வாழ ஆசைப்பட்ட ரேஷ்மா, தான் கருவுற்றதை குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் மறைத்துள்ளார். இதையடுத்து, ஒரு குழந்தையுடன் வந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ள முடியும் என ஃபேஸ்புக் நண்பர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே குழந்தையை பெற்றெடுத்த ரேஷ்மா, தனது காதலனுடன் வாழ்வதற்காக, தனது வீட்டின் அருகே உள்ள ரப்பர் தோட்டத்தில் குழந்தையை வீசிச் சென்றுள்ளார். இதையடுத்து தான், காவல்துறையினரின் விசாரணையில் ரேஷ்மா சிக்கியுள்ளார். இத்தோடு இந்த வழக்கு முடிவடையவில்லை. இதன் பின்னர் தான் வழக்கில் அடுத்தடுத்த திருப்பங்கள் காத்திருந்தன.

ரேஷ்மாவின் ஃபேஸ்புக் நண்பரான அனந்து யார் என்பதை விசாரிக்கத் தொடங்கினர். விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. ரேஷ்மாவிடம் ஃபேஸ்புக் மூலமாக பழகி வந்தது, அவரது உறவுக்கார பெண்களான ஆர்யா மற்றும் கிரீஷ்மா எனத் தெரிய வந்தது.TIME PASS செய்வதற்காக ரேஷ்மாவுடன் இரு பெண்களும் விளையாட்டாக ஆண் நண்பரைப்போல பழகியிருந்துள்ளனர்.

இதையடுத்து, இருவரையும் பிடித்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டது. ஆனால் அதிலும் ஒரு திருப்பம் அரங்கேறியது. காவல்துறையினர் தங்களை கைது செய்ய வருவதையறிந்த ஆர்யாவும், கிரீஷ்மாவும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். குழந்தை உயிரிழந்த வழக்கில் அடுத்தடுத்த அரங்கேறிய சம்பவங்கள்தான் கேரளாவில் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலி ஃபேஸ்புக் பக்கம் தொடங்கி, உறவுக்கார பெண்ணை விளையாட்டாக ஏமாற்ற முயற்சித்ததால் தற்போது மூன்று உயிர்கள் பறிபோயுள்ளன.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close