Published : 05,Jul 2021 09:33 PM
ஒலிம்பிக்கில் கொடியேந்தி செல்லும் மேரிகோம், மன்பிரீத் சிங் - இந்திய ஒலிம்பிக் சங்கம்

டோக்யோ ஒலிம்பிக்கில் இந்திய அணி சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் ஹாக்கி வீரர் மன்பிரீத் சிங் ஆகியோர் தேசியக் கொடியை ஏந்தி செல்ல உள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்யோவில் வரும் 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் தொடக்க விழாவின் போது நடைபெற உள்ள அணிவகுப்பில் இந்திய அணிக்கு பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமும் இந்திய ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங்கும் தேசியக் கொடி ஏந்தி செல்வார்கள் என இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெற உள்ள நிறைவு விழாவில் தேசியக் கொடியை மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஏந்திச் செல்ல உள்ளார்.