[X] Close

வாகன சோதனை: போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மதுரை வழக்கறிஞர்; வைரல் வீடியோ

தமிழ்நாடு,வைரல் வீடியோ

Vehicle-check-Madurai-lawyer-goes-viral-after-arguing-with-police

தலைக்கவசம் அணிய மறுத்து காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் குறித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Advertisement

கொரோனா நோய்த் தொற்று  காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், தேவையின்றி வெளியே சுற்றுவோரை கண்காணிக்கவும் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் சிலர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது.

image


Advertisement

இந்நிலையில், மதுரையில் முழு ஊரடங்கு நேரத்தில் மதுரை கீழமாசி வீதி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட காவலர் ஒருவர் தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டியை நிறுத்தியுள்ளார். அவர், தான் வழக்கறிஞர் எனவும், அவசரமாக செல்வதாகவும் தெரிவித்த நிலையில், காவலரோ தலைக்கவசம் அணிந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த வழக்கறிஞர் தன்னால் தலைக்கவசம் அணிய முடியாது, எதற்காக தலைக்கவசம் அணிய வேண்டும் என கேட்டிருக்கிறார். அத்துடன் தான் பல காவல் துறையினரை நீதிமன்றத்திற்கும், வீட்டிற்கும் அலைய விட்டவன் என வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, காவலருக்கு அபராதம் வசூலிக்க உரிமையில்லை, காவல் ஆய்வாளருக்கு தான் உரிமையுண்டு, நீங்கள் என் வாகனத்தை நிறுத்த முடியாது என பேசியதோடு, எனக்கு அபராதம் குறித்த குறுஞ்செய்தி வந்தால் நான் சும்மா இருக்க மாட்டேன், வழக்கு போடுவேன் அலைய விடுவேன் என மிரட்டிய அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close