Published : 03,Aug 2017 01:37 PM

15 வயது சிறுமியை 2-வது திருமணம் செய்தவர் கைது

15-year-old-girl-was-arrested-on-the-2nd-marriage

அரியலூரில் 15 வயது சிறுமியை ஏமாற்றி 2ஆவது திருமணம் செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். 

அரியலூர் மாவட்டம் அமிர்தராயன்கோட்டையைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்துவரும் இவருக்கு, அரியலூர் மாவட்டம் பாகல்மேடு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ராஜா, தனக்கு திருமணமாகவில்லை எனக்கூறி கடந்த 5 மாதங்களுக்கு முன் சிறுமியை திருமணம் செய்து, திருப்பூரில் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார். அவ்வப்போது சிறுமியை வந்து பார்த்துச் சென்றுள்ளார். இது குறித்து, ராஜாவின் மனைவிக்கு தகவல் தெரிந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனையடுத்து ராஜாவை ஜெயங்கொண்டம் மகளிர் காவல்துறையினர் கைது செய்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்