[X] Close

இந்திய அணியை வழி நடத்துவது எனக்கு கிடைத்த கவுரவம் - தவான்

விளையாட்டு

It-is-Been-a-Great-honour-for-me-to-Lead-Indian-Cricket-Team-says-Indian-Skipper-Shikhar-Dhawan

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலையில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியை வழிநடத்த உள்ளார் அனுபவ வீரர் ஷிகர் தவான். பெரும்பாலான சீனியர் வீரர்கள் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடருக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டதால் தவான் இளைஞர்கள் அதிகம் கொண்ட அணியை வழிநடத்துகிறார். 


Advertisement

“இந்திய அணியின் கேப்டனாக அணியை நான் வழிநடத்த உள்ளது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இந்திய ஏ அணிக்காக நான் வங்கதேச தொடரில் கேப்டனாக விளையாடி உள்ளேன். அவர் இந்த தொடரில் பயிற்சி அளிக்க உள்ளது சிறப்பானது. ஒரு அணியாக நாங்கள் இணைந்து நிச்சயம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். தொடருக்காக சிறப்பாக தயாராகி வருகிறோம்” என தவான் தெரிவித்துள்ளார். 

ராகுல் டிராவிட் அணிக்கு பயிற்சி அளிக்க உள்ளதை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் வரவேற்று ட்வீட் செய்து வருகின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close