திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தாடிநொளம்பை கிராமத்தில் 17 வயது சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரை சேர்ந்த ராஜா மகன் லக்கீத். இவர், டயர் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக லக்கீத் வந்தவாசி அடுத்த தாடிநொளம்பை கிராமத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டில் கடந்த 8 மாதங்களாக தங்கி வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்றுள்ளார்.
சிறுமியின் தந்தை பல இடங்களிலும் சிறுமியை தேடிப்பார்த்தும் கிடைக்காததால் வட வணக்கம் பாடி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடிவந்தனர்.
இதையடுத்து பெங்களூரை சேர்ந்த லக்கீத் என்பவர் தான் சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லக்கீத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
Loading More post
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!