[X] Close

நெருங்கி பழகிய படங்களை வைத்து மிரட்டியதால் மாணவி தற்கொலை - கல்லூரி மாணவர் கைது

குற்றம்,வீடியோ ஸ்டோரி

கோவையில் கல்லூரி மாணவர் பணம்கேட்டு மிரட்டியதால் மனஉளைச்சல் அடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


Advertisement

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியுடன் கேசவகுமார் என்ற கல்லூரி மாணவர் நெருங்கி பழகிவந்துள்ளார். ஒரு கட்டத்தில் கேசவகுமார் தவறான நபர் என்பதை தெரியவந்ததை அடுத்து அவருடனான பழக்கதை முறித்துக் கொண்டார் கல்லூரி மாணவி. இதனால் ஆத்திரமடைந்த கேசவகுமார், நண்பர்களாக பழகியபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மார்ப்பிங் செய்து இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மாணவியை மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன மாணவி 35,000 ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளார். இதுதவிர தனது இரண்டு பவுன் தங்க நகையையும் கொடுத்திருக்கிறார். எனினும் மேலும் பணம்கேட்டு மாணவியை கேசவகுமார் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் தலைமறைவான கேசவகுமாரை போலீசார் கைதுசெய்தனர். மேலும் கேசவகுமாருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது தாயாரையும் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close