இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடித்திருக்கும் ‘சத்யா’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று நடிகர் சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
’கட்டப்பாவ காணோம்’ படத்திற்கு பிறகு சிபிராஜ் சைத்தான் பட இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியுடன் கைகோர்த்துள்ள படம் ‘சத்யா’. கடந்த ஆண்டு தெலுங்கில் ரவிகாந்த் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான ‘க்ஷணம்’ படத்தின் ரீமேக் இது. சிபிராஜுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசனும், போலீஸ் அதிகாரியாக வரலக்ஷ்மி சரத்குமாரும் நடித்துள்ளனர். முன்னதாக படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டு ‘யு/ஏ’ சான்றிதழ் பெறப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தை நடிகர் சத்யராஜ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘நாதாம்பாள் ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் தயாரித்துள்ளார். தெலுங்கில் மெகா ஹிட்டான ‘க்ஷணம்’ திரைப்படத்தின் ரீமேக் என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப கதையில் சிற்சில மாற்றங்களை செய்து உருவாக்கியுள்ளனர். தெலுங்கில் வெற்றியடைந்ததால் தமிழிலும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Loading More post
கும்பகோணம்: தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை
பரிதாபம் எப்படி வேலை செய்யுது பாத்தியா பையா.. இளைஞனின் சுவாரஸ்யமான ஏர்போர்ட் ட்ரிக்!
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
மீண்டும் ஒரு கொடூர விபத்து... கல்லட்டி பாதையின் அபாயத்தை இனியாவது உணர்வோமா?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!