Published : 28,Jan 2017 08:19 AM

மேற்கு வங்கத்தில் களைகட்டிய சீனா புத்தாண்டு கொண்டாட்டங்கள்...!

Chinese-New-Year-celebrations-in-Kolkatas-Chinatown

இந்தியாவின் அண்டை நாடான சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. சேவல் ஆண்டாக பிறந்துள்ள இந்த புத்தாண்டை மேற்கு வங்காள மக்கள் ஆடிப்பாடி உற்சாகத்துடன் வரவேற்றனர்.

சீனாவில் ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு ஜனவரி 28 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் பல சீன குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ‘சாட்டா காலி’ என்ற இடத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இன்று அதிகாலை ஆடல், பாடலுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விமர்சியாக கொண்டாடப்பட்டது. புத்தாண்டையொட்டி கொல்கத்தாவில் கடந்த இரண்டு நாட்களாகவே சிங்கம் மற்றும் டிராகன் நடனம் நடைபெற்றது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்