[X] Close

சசிகலாவை சிறையில் சந்திக்கிறார் தினகரன்?

ttv-dinakaran-will-meet-sasikala-in-jail

பெங்களூரு சிறையில் சசிகலாவை, இன்று சந்தித்து பேச, தினகரன் முடிவு செய்துள்ளார். 

அ.தி.மு.க.,வை, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக, இம்மாதம் 5ம் தேதியிலிருந்து  கட்சி தலைமை அலுவலகம் வருவதற்கு, தினகரன் முடிவு செய்துள்ளார். அன்று, அனைத்து பிரமுகர்களையும் சென்னைக்கு வரும்படியும் தினகரன் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை, தினகரன், இன்று சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அ.தி.மு.க.,வின் இரு அணிகள் இணைவதற்கு விதிக்கப்பட்ட, 60 நாட்கள் கெடு, ஆகஸ்ட் 4ம்தேதியுடன் நிறைவு அடைகிறது. இதனால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சசிகலாவுடன் தினகரன் விவாதிக்கலாம் எனவும் தெரிகிறது. மேலும் நேற்று அதிமுக தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டம் தொடர்பாகவும் இருவரும் ஆலோசனை நடத்துவார்கள் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close