[X] Close

இந்தியா: புதிதாக 67,208 பேருக்கு கொரோனா பாதிப்பு

இந்தியா,கொரோனா வைரஸ்

India-reports-67208-new-COVID19-cases-in-last-24-hours-as-per-Health-Ministry
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,208 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் கடந்த 8-ம் தேதி முதல் தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 67 ஆயிரத்து 208 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 97 லட்சத்து 313 ஆக அதிகரித்துள்ளது.
 
கொரோனா பாதிப்புடன் தற்போது 8 லட்சத்து 26 ஆயிரத்து 740 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 570 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 84 லட்சத்து 91 ஆயிரத்து 670 ஆக அதிகரித்துள்ளது.
 
image
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 2 ஆயிரத்து 330 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 81 ஆயிரத்து 903 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 26 கோடியே 55 லட்சத்து 19 ஆயிரத்து 251 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement
[X] Close