பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்கும் மக்களின் சிம் கார்டுகளின் இணைப்புகள் முடக்கப்படும் என அந்த மாகாணத்தின் அரசு தெரிவித்துள்ளது. அந்த மாகாணத்தின் சுகாதார துறை அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொரோனாவை முறியடிக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான் ஒரே தேர்வு என உலக பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால் பல்வேறு நாடுகள் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் மக்களிடையே விழிப்புணர்வு கொடுத்தும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள பெருவாரியான மக்கள் முன்வரதாதல் இந்த தடாலடி முடிவை அந்த மாகாண அரசு எடுத்துள்ளது. இந்த மாகாணத்தில் தடுப்பூசி செலுத்த அரசு நிர்ணயித்த இலக்கை அடைய முடியாததால் இந்த ஏற்பாடாம்.
அதே நேரத்தில் பாகிஸ்தானில் முதல் டோஸ் தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்ட மக்கள் இரண்டாவது டோஸை செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டாததும் இதற்கு ஒரு காரணம்.
பாகிஸ்தானில் இதுவரை 95,59,910 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மொத்தமாக பாகிஸ்தானின் மக்கள் தொகையில் 1.2 சதவிகிதம் பேர் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!