[X] Close

பிக்பாஸ் போட்டியில் வெளியேற்றப்பட்டவருக்கு ரூ.20 லட்சம் அபராதம்

fined-Rs-20-lakh-for-picking-up-at-Biggas-competition

தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியதால் வெளியேற்றப்பட்ட நடிகர் சம்பூர்னேஷ் பாபுவுக்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 


Advertisement

சம்பூர்னேஷ் பாபு உடல்நலம் குன்றியிருந்ததாதகாவும், பிக் பாஸ் வீடு வசதியாக இல்லை எனவும் கூறி, கத்தியை எடுத்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, போட்டிகளின் விதிகளை மீறியதாகவும், தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டி வன்முறைக்கு வித்திட்டதாகவும் கூறி சம்பூர்னேஷ் பாபு சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

இந்நிலையில் போட்டிகளின் விதிமுறைகளை மீறியதாகவும், வன்முறையில் ஈடுபட்டதாகவும் கூறி சம்பூனேஷ் பாபுவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் 20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்தப் பணத்தை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட 10 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்பது நிபந்தனை. தற்போது பத்து லட்சம் ரூபாயை சம்பூர்னேஷ் பாபு பிக்பாஸ் நிகழ்ச்சி நிர்வாகிகளிடம் கொடுத்துள்ளார். 
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close