Published : 27,Jan 2017 02:58 PM
மு.க.ஸ்டாலின் 10 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கினார்: ஓ.எஸ்.மணியன்

வர்தா புயல் பாதிப்பின்போது சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசு, வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ஆறுதலாக இல்லை என பேரவையில் பேசிய எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வறட்சியால் உயிரிழந்த விவசாயிகள் விவரங்களை ஆட்சியர்களிடம் கேட்டுள்ளதாகவும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறினார். பின்னர், பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் 10 பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கினார். அப்படியென்றால், 10 பேர் தான் உயிரிழந்ததாக ஸ்டாலின் ஒத்துக்கொள்கிறாரா எனக் கேள்வி எழுப்பினார். இதனால், திமுக - அதிமுக இடையே காரசாரமாக விவாதம் நடைபெற்றது.