[X] Close

மரத்தை இடமாற்றம் செய்யும் போது விபத்து - பெண் உடல் நசுங்கி பலி

accident-in-coimbatore

கோவை மாட்டம் வடவள்ளி அருகே நூறு ஆண்டுகள் பழமையான மரத்தை வேருடன் இடமாற்றம் செய்யும் போது ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


Advertisement

கோவையில் சாலை விரிவாக்க பணிக்காக மரங்களை வேருடன் பிடுங்கி வேறு இடங்களில் நடும் பணியை ஓசை எனும் தனியார் அமைப்பு நெடுஞ்சாலைத்துறை ஒத்துழைப்புடன் செய்துவருகிறது. இந்நிலையில் வடவள்ளி, தொண்டாமுத்தூர் சாலையில் நூறு ஆண்டுகள் பழமையான மரத்தை இடமாற்றம் செய்யும் பணி நடைபெற்றது. கிரேன் மூலம் மரத்தை பிடுங்கி லாரியின் மீது வைத்ததால், பாரம் தாங்காத லாரி மரத்துடன் கீழே சாய்ந்தது. அப்போது, மரத்தை பூஜை செய்து வழியனுப்ப வந்த சாந்தி என்பவரின் வீட்டின் மீது மரம் சாய்ந்ததில், வீட்டின் அருகே இருந்த மின்கம்பம் ஒன்று சாந்தியின் தலையில் விழுந்தது. இதில் சாந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தங்களின் தாய்க்கு என்ன ஆனது என்று அறியாத சாந்தியின் மகன்கள் முரளி மற்றும் சுதாகர் கீழே விழுந்த லாரி ஓட்டுநரை காப்பாற்றியுள்ளனர். அதன்பின்னரே தங்களின் தாய் உயிரிழந்தது அவர்களுக்கு தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு குறித்து முறையாக திட்டமிடாததுதான் உயிரிழப்பிற்கு காரணம் என அப்பகுதி மக்கள் சாலை மறியலி்ல் ஈடுபட்டனர். அதிகாரிகளின் சமாதான பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
 

வீடியோ

Related Tags : coimbatoreaccidentகோவை

Advertisement

Advertisement
[X] Close