”5000 பேர் ஒரே நேரத்தில் சென்று என்னை மட்டும் காப்பாத்தலியே என்று மருத்துவர்களை தாறுமாறா திட்டுறோமே நியாயமா?” என்று கேள்வியெழுப்பி வீடியோ வெளியிட்டிருக்கிறார் நடிகர் சிவக்குமார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “கொரோனா அறிகுறிகளில் வயிற்றுப்போக்கு, வாந்தி,தலைவலி என எந்த அறிகுறிகள் தெரிந்தாலும் வீட்டிலேயே வைத்தியம் பார்க்காமல் மருத்துவமனைக்கு கூட்டிப்போய்டுங்க. மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே என்றால் தனியாக தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கும் கொரோனா வரும். அதனால், வெளியில் விளையாட விடாதீர்கள். கடந்த ஒரு வருடமாக மருத்துவர்கள் குடும்பம், குழந்தை குட்டிகளை மறந்து கொரோனா சூழலில் பணியாற்றி வருகிறார்கள்.
கண்டிப்பாக தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளவும்.. நடிகர் சிவகுமார் அவர்கள். #sivakumar #actorsivakumar #CoronaVaccination #TNGovt https://t.co/TeYA0AoUSZ pic.twitter.com/vCQ8EF5GUO
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிர்தியாகம் செய்துள்ளார்கள். மருத்துவமனையில் 500 படுக்கைகள்தான் உள்ளன. ஆனால், 5000 பேர் ஒரே நேரத்தில் சென்று என்னை மட்டும் காப்பாத்தலையே என்று தாறுமாறாக திட்டுறோமே நியாயமா? அதனால், கொரோனா விதிமுறைகளை கடைப்பிடியுங்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டால் கொரோனா நம்மை கடுமையாக தாக்காது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அநாவசியமாக சுற்றாதீர்கள். முழுமையான ஊரடங்கை கடைபிடித்து, தடுப்பூசியும் செலுத்திக்கொண்டால் இதிலிருந்து விடுபடலாம். நாம் அனைவரும் எச்சரிகையாக இருந்து கொரோனாவை தடுப்போம்” என்று பேசி விழிப்புணர்வுட்டியிருப்பதோடு மூச்சுப்பயிற்சி செய்வதெப்படி என்பதையும் விளக்கியுள்ளார்.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்