[X] Close

டெல்லி: பிரதமர் மோடியை கண்டித்து போஸ்டர் ஒட்டிய 17 பேர் கைது!

இந்தியா

17-Arrested-Over-Posters-Against-PM-Modi-In-Delhi

பிரதமர் மோடி குறித்து அவதூறான வகையில் சுவரொட்டிகளை ஒட்டியதாக 17 நபர்களை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.


Advertisement

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்‍கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்பாக பிரதமர் மோடியை கண்டித்து தலைநகர் டெல்லியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. அதில், நம்முடைய குழந்தைகளுக்குத் தேவைப்படும் தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள் என்று பல்வேறு கேள்விகளை எழுப்பி சுவரொட்டிகள் டெல்லியின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன. 

டெல்லியின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த இந்த போஸ்டர்களால் தலைநகரில் நேற்று பரபரப்பு நிலவியது. இந்த போஸ்டர்கள் தொடர்பாக நகரின் பல காவல் நிலையங்களில் புகார் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்த போஸ்டர்களை ஒட்டிய 17 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக பல காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.


Advertisement

கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலும் கூலிக்கு போஸ்டர் ஒட்டியவர்கள் என்றும் இந்த போஸ்டரை அச்சடித்ததன் பின்னணியில் இருப்பவர்களை கண்டறியும் பணி நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்


Advertisement

Advertisement
[X] Close