[X] Close

"சம்பளம் முக்கியமல்ல, சேவை எண்ணம் மட்டுமே!" - 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், பணியாளர்கள்

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்,வீடியோ ஸ்டோரி

கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆம்புலன்ஸ் தேவைகளும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், மருத்துவ சேவையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் நேரம் காலமின்றி அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர். 


Advertisement

கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. அதற்கேற்ப மருத்துவத்துறையை சேர்ந்தவர்களும் மிகத்தீவிரமாக சேவையாற்றி வருகின்றனர். அதில், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரை முதலில் அணுகுவது இவர்கள்தான். முதல் அலையின் போது கடும் சிரமத்திற்கு இடையே பணி செய்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்,இப்போதும் அதே சேவை மனப்பான்மையுடன் களத்தில் நிற்கின்றனர்.

image


Advertisement

இப்படிப்பட்ட நெருக்கடியான நேரத்திலும் சம்பளம் ஒரு பொருட்டே இல்லை 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் யுவராஜ் தெரிவித்தார். மருத்துவ உதவியாளர் அன்பு சத்தியா கூறும் போது, “உயிரைக்காப்பாற்றும் வேலை என்பதால், சிரமங்கள் எதுவும் தெரிவதில்லை.மிகவும் விரும்பி பணியாற்றுகிறேன்” என்றார்.

கொரோனா நெருக்கடி நிலையை பயன்படுத்தி ஒரு சிலர் தவறு செய்தாலும், பெரும்பாலானவர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாகவும், மருத்துவ சேவையில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்களின் பங்களிப்பு அளப்பறியது என்றும் முன்களப் பணியாளர்கள் குறிப்பிட்டனர்.


Advertisement

Advertisement
[X] Close