[X] Close

உத்தரப் பிரதேசத்தில் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு!

இந்தியா

Amid-spike-in-COVID19-cases-Uttar-Pradesh-extends-corona-curfew-till-May-17

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.


Advertisement

கொரோனா இரண்டாம் அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக உத்தரப்பிரதேசம் உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 2.45 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அங்கு கொரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாநிலத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. உயிரிழந்தவர்களை எரியூட்ட சுடுகாடுகளில் சடலங்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமலாகியுள்ள ஊரடங்கு நாளையுடன் ( மே 10) முடிவடையவுள்ள நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு (மே 17 வரை) முழு ஊரடங்கை நீட்டித்து உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.


Advertisement


Advertisement

Advertisement

Advertisement
[X] Close