[X] Close

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 21,000-ஐ கடந்தது; ஒரே நாளில் 144 பேர் உயிரிழப்பு

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

In-Tamil-Nadu--the-daily-corona-incidence-exceeds-21-000--144-deaths-in-a-single-day

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 21,000-ஐ கடந்தது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 144 பேர் உயிரிழந்தனர்.


Advertisement

கொரோனா பரவலின் இரண்டாவது அலை காரணமாக நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 21, 228 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 748 சிறார்களுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் ஒரே நாளில் 6,228 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 144 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 1,25,230 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் மட்டும் 33,222 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


Advertisement

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ள 144 பேரில் 36 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement
[X] Close