தமிழகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி 153 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதில் திமுக 119 இடங்களிலும் காங்கிரஸ் 17, மதிமுக-4 , சிபிஎம்-2, சிபிஐ-2, விசிக-4, மற்ற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
அதிமுக கூட்டணி 80 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 71 இடங்களிலும் பாமக 5, பாஜக 3 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.
தமிழகத்தில் திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் என ஐந்துமுனை போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் 25 தொகுதிகள், சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் தலா 6 தொகுதிகளிலும், கொமதேகவுக்கு நான்கு தொகுதிகளும், ஐயுஎம்எல் கட்சிக்கு 3 தொகுதிகளும், மமகவுக்கு 2 தொகுதிகளும், ஆதித்தமிழர் பேரவை, தமிழக வாழ்வுரிமை கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, மக்கள் விடுதலைக்கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா 1 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. திமுக 173 தொகுதிகளில் நேரடியாக களமிறங்கியது.
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகளும், பாஜகவுக்கு 20 தொகுதிகளும், தமாகாவுக்கு 6 தொகுதிகளிலும், மூவேந்தர் முன்னேற்ற கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னணி கழகம் ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன.
அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகளும், எஸ்டிபிஐக்கு 6 தொகுதிகளும், ஏஐஎம்ஐஎம்க்கு 3 தொகுதிகளும், மருதுசேனை, கோகுலம் மக்கள் கட்சி, விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் கூட்டணியில் ஐஜேகே வுக்கு 40 தொகுதிகளும், சமத்துவ மக்கள் கட்சிக்கு 37 தொகுதிகளும், தமிழக மக்கள் ஜனநாயக கட்சிக்கு 11 தொகுதிகளும், மதசார்பற்ற ஜனதா தளத்துக்கு 3 தொகுதிகளும், ஜனநாயக திராவிட முன்னேற்றகழகம் , பிரகதிஷீல் சமாஜ்வாதி கட்சி ஆகியவை தலா 2 தொகுதிகளிலும், தலித் முன்னேற்ற கழகம், புதிய விடுதலைக்கட்சி, குறிஞ்சி வீரர்கள் கட்சி, வஞ்சித் பகுஜன் கட்சி ஆகிய கட்சிகள் தலா 1 தொகுதியில் போட்டியிட்டன, மநீம 135 தொகுதிகளில் போட்டியிட்டது.
நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தல்களை போலவே இந்த முறையும் கூட்டணி அமைக்கவில்லை. 234 தொகுதிகளும் தனித்து களம் இறங்கியது.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி