Published : 30,Apr 2021 12:25 PM
போட்டியின் போது காயமடைந்த சுமோ மல்யுத்த வீரர் உயிரிழப்பு

ஜப்பானில் சுமோ மல்யுத்த போட்டியின் போது தலையில் காயமடைந்த வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டோக்கியோ நகரில் கடந்த மார்ச் 26ஆம் தேதி சுமோ மல்யுத்த போட்டி நடைபெற்றது. இதில் 28 வயதான மிட்சுமி அமானோ கலந்து கொண்டார். அப்போது எதிர் போட்டியாளருக்கும் இவருக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றதில் மிட்சுமி அமானோ தூக்கிவீசப்பட்டார். அதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. கடந்த ஒரு மாதமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
போட்டியின் போது மிட்சுமி அமானோ கீழே விழுந்து அசைவின்றி காணப்பட்ட வீடியோ அப்போதே பலரால் பகிரப்பட்டு, உடனடியாக மருத்துவ உதவி ஏன் தரப்படவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டது. சுமோ போட்டி விதிகளை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.