Published : 24,Apr 2021 04:28 PM

தஞ்சாவூர்: மனைவி இறந்த சோகத்தில் சில மணி நேரத்தில் கணவனும் உயிரிழந்த பரிதாபம்

Thanjavur-It-is-a-pity-that-the-husband-also-lost-his-life-in-the-tragedy-of-his-wifes-death

மனைவி இறந்த சோகத்தில் இருந்த கணவர் அடுத்த சில மணி நேரத்தில் உயிரிழந்தார். இந்த தம்பதிகள் இருவரும் வாழ்நாளில் இணை பிரியாமல் வாழ்ந்து வந்ததை போல் சாவிலும் இணை பிரியாமல் இயற்கை எய்தி உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள அம்மன்பேட்டை வெள்ளாள தெருவைச் சேர்ந்தவர் திருவேங்கடம் (80). இவரது மனைவி அம்சவள்ளி (78). இணைபிரியாது வாழ்ந்து வந்த கணவன் - மனைவி இருவருக்கும் 5 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் வயது முதிர்வின் காரணமாக அம்சவள்ளி நேற்று மாலை உயிரிழந்தார். சோகத்தில் இருந்த அவரது கணவர் திருவேங்கடம் மிகுந்த கவலையுடன் அழுதுகொண்டே இருந்தார். சிறிது நேரத்தில் தந்தையின் அழுகை சத்தம் கேட்கவில்லை என அவரது மகன்கள் போய் பார்த்தபோது அவரும் இறந்த தெரியவந்தது.

இந்த தம்பதிகள் இருவரும் வாழ்நாளில் இணை பிரியாமல் வாழ்ந்து வந்ததை போல் சாவிலும் இணை பிரியாமல் இயற்கை எய்தி உள்ளனர். இச்சம்பவம் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்