[X] Close

படிக்கல் சதம் - கோலி அரை சதம்! ராஜஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது பெங்களூர்!

ஐபிஎல் திருவிழா

Royal-Challengers-Bangalore-beats-Rajasthan-Royals-by-10-wickets-and-opening-Batsman-of-RCB-Devdutt-Padikkal-Virat-Kohli-Master-class-batting-helped-the-team-and-Padikkal-Slams-Century

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் சீசனின் 16வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி இருபது ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்களை குவித்தது. 


Advertisement

178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய பெங்களூர் அணிக்கு கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் ராஜஸ்தான் அணி பவுலர்களின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். அதில் படிக்கல் ஆட்டோ மோடில் இறங்கி அட்டாக் செய்தது போல இருந்தது அவரது ஆட்டம். 52 பந்துகளில் 101 ரன்களை விளாசினார் படிக்கல். இதில் 11 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். அதன் மூலம் படிக்கல் ஐபிஎல் அரங்கில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்களின் பட்டியலில் அதிவேக சதம் அடித்த முதல் வீரராகி உள்ளார்.  


Advertisement

கோலி தன் பங்கிற்கு 47 பந்துகளில் 72 ரன்கள் விளாசினார். கோலி 61 ரன்கள் எட்டிய போது ஐபிஎல் அரங்கில் 6000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற மைல்கல்லை எட்டினார். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 181 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதன் மூலம் 16.3 ஓவர்களில் வெற்றி பெற்றது பெங்களூர். இது இந்த சீசனில் பெங்களூர் அணி பதிவு செய்துள்ள நான்காவது வெற்றியாகும். அதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது பெங்களூர். 


Advertisement

Advertisement
[X] Close