[X] Close

தெலங்கானா: ஐஏஎஸ் அதிகாரியாக நடித்து 29 பேரிடம் 80லட்சம்  ஏமாற்றிய 22 வயது பொறியியல் மாணவன்

Subscribe
22-year-old-engineering-student-poses-as-IAS-officer--cheats-29-people-of----80-lakh

தெலங்கானாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த பொறியியல் மாணவர் ஒருவர், 29 பேரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாகக்கூறி 80 இலட்ச ரூபாய் மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.  


Advertisement

மூன்றாம் ஆண்டு பிடெக் தொழில்நுட்ப மாணவரான பீர்பூர் மண்டலத்தைச் சேர்ந்த பார்லா லக்ஷ்மிநாராயணா தன்னை ..எஸ் அதிகாரி எனக்கூறிக்கொண்டு, 29 பேரிடம் ரூ .80 லட்சம் வசூலித்துள்ளார். அந்த பணத்தின் மூலம் இரண்டு கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் ஒரு வீட்டை வாங்கினார்" என்று மஞ்சேரியல் போலீஸ் அதிகாரி கூறினார்.

லக்ஷ்மிநாராயணா தனது ஓட்டுநராகவும், தனிப்பட்ட உதவியாளராகவும் காட்ட இரண்டு பேரை நியமித்திருந்தார். மேலும் 3-5 லட்ச ரூபாய் கொடுத்தால் அவர்களுக்கு அரசாங்க வேலை பெற்றுத்தருவதாக மக்களிடம் சொல்லி ஏமாற்றினார் என போலீசார் தெரிவித்தனர். தலா 3 லட்ச ரூபாய் ஏமாற்றப்பட்ட இரண்டு பேரின் புகார்களின் அடிப்படையில் போலீசார் இவரை கைது செய்தனர்.


Advertisement
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close