[X] Close

"இது நீண்ட பயணம்; வயதாகிவிட்டதை போல உணர்கிறேன்" - தோனி

Subscribe
200-matches-for-CSK-makes-me-feel-very-old-says-MS-Dhoni

200 போட்டிகள் சிஎஸ்கேவுக்காக விளையாடியது வயதாகிவிட்டது போன்ற உணர்வை தருகிறது என்று கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.


Advertisement

14 ஆவது ஐபிஎல் டி20 தொடரின் நேற்றையப் போட்டியில் சிஎஸ்கே - பஞ்சாப் அணிகள் மோதின. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அபார வெற்றிப் பெற்று, இந்தத் தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்தப் போட்டி கேப்டன் தோனிக்கு, சிஎஸ்கேவுக்காக விளையாடும் 200 ஆவது போட்டியாகும். இந்தப் போட்டியில் சிஎஸ்கே வெற்றிப் பெற்றது பெரும் மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு தந்தது.

இதனையடுத்து வெற்றிக்கு பின்பு பேசிய தோனி "மிக வயதானவன் என்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு மிக நீண்ட பயணம். கடந்த 2008 ஆம் ஆண்டு இந்த பயணம் தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா, துபாய் மற்றும் திரும்ப இந்தியாவில் விளையாடினேன். 200வது போட்டியை மும்பையில் விளையாடுவேன் என நினைக்கவில்லை" என்றார்.


Advertisement

மேலும் "தீபக் சாஹர் தேர்ந்த பந்து வீச்சாளராகி விட்டார். பிராவோவும் தேவையான நேரத்தில் சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த கூடியவர் என்பதில் எந்த ரகசியமும் இல்லை" என்றார் தோனி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் புதிய தலைமுறை இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்க
முக்கியச் செய்திகளை உடனுக்குடன் அறிய, நேர்த்தியான வாசிப்பு அனுபவம் பெற புதிய தலைமுறை ஆப் டவுன்லோடு செய்க >
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close