[X] Close >

அரியலூர்: ஆட்டோ - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு!

Ariyalur-Two-women-were-killed-in-a-head-on-collision-with-an-auto-van

அரியலூர் அருகே வேன் - ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.


Advertisement

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது குடும்பத்துடன் இன்று காலை வி.கைகாட்டியில் இருந்து உடையார்பாளையம் பெரிய கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக ஆட்டோவில் சென்றார். அப்போது உடையார்பாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே வந்தபோது, எதிரே வந்த ஆம்னி வேன், ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

image


Advertisement

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த மணிகண்டனின் தாயார் சந்திரா மற்றும் பக்கத்து வீட்டு மூதாட்டி பவுனம்மாள் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த உடையார்பாளையம் போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

image

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த மணிகண்டன், ஆட்டோ ஓட்டுனர் சிற்றரசு உட்பட 3 பேர் ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close