[X] Close >

அதிகரித்து வரும் கொரோனா: ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் மோடி!

Prime-Minister-Narendra-Modi-chaired-a-high-level-meeting-with-officials-and-discussed-about-the-country-s-present-COVID19-situation

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில் உயர்மட்ட குழுவை சார்ந்த முக்கிய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் தீவிரம், நாட்டில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருவதன் விவரங்கள் என அனைத்தையும் ஆலோசித்ததாக தெரிகிறது. 


Advertisement

இந்தக் கூட்டத்தில் பிரதமரின் முதன்மை செயலாளர், அமைச்சரவை செயலாளர் மற்றும் சுகாதார செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றதாக தெரிகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 92,249 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர், டெல்லி, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய8 மாநிலங்கள்தான் கொரோனாவின் தாக்கம் அதிகம் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கண்டறியப்பட்ட இந்தியாவின் மொத்த பாதிப்பில் சுமார் 81 சதவிகிதம் இந்த 8 மாநிலங்களில் இருந்து தான் கண்டறியப்பட்டுள்ளன. 

image


Advertisement

சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரிகள் பரிசோதனையை அதிகரிக்கவும், தொற்று பதிப்பு அதிகம் உள்ள இடங்களை தனிமைப்படுத்தவும் வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close