[X] Close >

ஐபிஎல் தொடருக்காக சென்னை வந்தடைந்தார் கோலி

RCB-Skipper-Virat-Kohli-Arrived-to-Chennai-and-he-was-under-Quarantine-now-says-Team-Instagram-Handle

அடுத்த சில நாட்களில் ஐபிஎல் 2021 தொடர் ஆரம்பமாக உள்ளது. இந்த முறை எட்டு ஐபிஎல் அணிகளும் அவர்களது ஹோம் கிரவுண்டில் விளையாடாமல் மற்ற மைதானங்களில் விளையாடுகின்றனர். இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி  சென்னை வந்துள்ளார். அதனை அந்த அணி நிர்வாகம் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் மூலம் உறுதி செய்துள்ளது. 


Advertisement

“நாங்கள் இணையதளத்தில் இன்றைய நாளுக்கான பிரேக்கிங் செய்தியை பகிர்வோம் என நீங்கள் நினைத்திருந்தால் அது குறித்து சிந்தியுங்கள். அதனை உறுதி செய்ய விரும்புகிறோம். கேப்டன் கோலி சென்னை வந்துள்ளார்” என அந்த பதிவுக்கு கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று காரணமாக வீரர்கள் அனைவரும் பயோ பபுளில் இருக்க வேண்டி உள்ளது. அதன் காரணமாக கோலி 7 நாட்களுக்கு தன்னை தனிமைப்படுத்திக் கொள்வார் எனத் தெரிகிறது. தொடர்ந்து அதன் பின்னர் பெங்களூரு அணியுடன் அவர் இணைவார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close