இந்தி நடிகர் அஜாஸ்கானை போதைப்பொருள் தடுப்பு பிரிவு துறையினர் கைது செய்தனர்.
நடிகர் அஜாஸ் கான் வீட்டில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் இருந்ததாகக் கூறி, ராஜஸ்தானில் இருந்து மும்பை விமான நிலையத்திற்கு வந்த அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் இன்று அவரை கைது செய்துள்ளனர்.
இது குறித்து போதைப்பொருள் தடுப்புத்துறை அதிகாரிகள் கூறும் போது, “அஜாஸ் கானுக்கு சொந்தமான வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. அவருக்கு போதைப்பொருள் விற்பனையாளர் சதாப் பாரூக் ஷேக் என்பவருடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததுள்ளது கடந்த வியாழக்கிழமை 2 கிலோ கிராம் போதை மருந்து வைத்திருந்ததாக ஷேக்கை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து, நடிகர் அஜாஸ் கான் கூறும் போது, “ நான் தன்னிச்சையாகத்தான் அதிகாரிகளை சென்று சந்தித்தேன். நான் குற்றமற்றவன். எனது வீடுகளில் இருந்தும் விமான நிலையத்தில் இருந்தும் எதுவும் கைப்பற்றப்படவில்லை” என்றார். மேலும் அதிகாரிகள் மாத்திரைகளை கைப்பற்றியதை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, “நிச்சயமாக இல்லை. அவர்களிடம் சென்று கேளுங்கள். எங்கிருந்து கைப்பற்றினார்கள் என்று.. எனது மனைவிக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அதனால் அவர் மன அழுத்ததில் இருந்தார். அதற்காக அவர் பயன்படுத்திய மாத்திரைகளில் இருந்து நான்கு மாத்திரைகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.” என்றார்.
Loading More post
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா!
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
பெங்களூரூ: எரியூட்ட சடலத்துடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ