இந்தியில் ரீமேக் ஆகும் 'துருவங்கள் பதினாறு' படத்தில், ரகுமான் கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார் நடிகர் வருண் தவான்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடிப்பில் 2016-இல் வெளியான 'துருவங்கள் பதினாறு' திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த ஆண்டில் 100 நாள்கள் ஓடி மாபெரும் வெற்றி அடைந்த படமாக 'துருவங்கள் பதினாறு' அமைந்தது. குறிப்பாக, இப்படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இளம் இயக்குனராக அடையாளம் காணப்பட்டார். இப்போது தனுஷ் போன்ற முன்னணி படங்களில் இணைந்து பணியாற்ற இருக்கிறார்.
இந்த நிலையில், 'துருவங்கள் பதினாறு' தற்போது இந்தி செல்ல இருக்கிறது. ஆம், 'துருவங்கள் பதினாறு' இந்தி ரீமேக் உறுதிசெய்யப்பட்டுள்ளது. பாலிவுட் ரீமேக்கில் ரகுமான் நடித்த கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நடிகை பரினீதி சோப்ரா இப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சஜித் நதியாட்வாலா என்பவர் இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறார். 'சாங்கி' என்று தற்காலிகமாக இந்தப் படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்தி ரசிகர்களின் ரசனைக்கேற்ப இந்த ரீமேக்கில் சில மாற்றங்களைச் செய்துள்ளனர். சுவாரஸ்யமாக, ரீமேக் மூலமாக முதன்முறையாக வருண் தவான் போலீஸ் கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.
மறுபுறம், கார்த்திக் நரேன் தற்போது தனது நான்காவது படமாக தனுஷ் மற்றும் மாளவிகா மோகனன் இணையவுள்ள தனுஷின் 43-ஆவது திரைப்படத்தை இயக்க இருக்கிறார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கி வரும் 'கர்ணன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், பாலிவுட் படமான 'அந்தராங்கி ரே' படத்தின் படப்பிடிப்பும் இன்றோடு முடிந்தது. அதனை அடுத்து அவர் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்க உள்ள ‘டி43’ படத்தில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். ஏற்கெனவே இரண்டு பாடல்களை ஜி.வி இசையமைத்துவிட்டார் என்று அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!