[X] Close >

’லாபம்’ ஏப்ரல் வெளீயீடு! ஜனநாதன் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டார் - தயாரிப்பு நிறுவனம்

Our-director-has-completed-all-the-work-for-the-film--laabam-----Vijay-Sethupathi

மறைந்த இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் கடைசியாக இயக்கியிருந்த ‘லாபம்’ படத்தின் அனைத்து பணிகளையும் அவரே முடித்துக்கொடுத்துவிட்டதாகவும், படம் ஏப்ரலில் வெளியாகிறது என்றும் படத்தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.


Advertisement

தயாரிப்பு நிறுவனம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,“இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் படங்களில் தொனிக்கும் கருத்துகளுக்கும் ஒலிக்கும் போராட்டக் குரலுக்கும் என்றைக்கும் முடிவு கிடையாது. அவரது படங்களில் வெளிப்படுத்தியுள்ள கருத்துகள் யாவும் காலத்துக்கும் பொருந்திப் போகக்கூடியவை. அப்படிப்பட்ட படைப்புகளில் ஒன்றுதான் எங்கள் நிறுவனமும் விஜய் சேதுபதி புரொடொக்‌ஷனும் இணைந்து தயாரித்து விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி ஜனநாதன் இயக்கியுள்ள லாபம் திரைப்படம். படத்தின் இறுதிக்கட்டப் பணிகளின்போது எங்கள் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனின் மறைவு மிகுந்த வேதனையும் வருத்தமும் அளிக்கிறது.

image


Advertisement

அதேசமயம் எங்கள் இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் ‘லாபம்’ படத்தின் அனைத்துப் பணிகளையும் முழுமையாக முடித்துக் கொடுத்துவிட்டார். எஞ்சியிருக்கும் சில பணிகளை படக்குழுவினரே முடித்து வெளியிடவுள்ளோம். அனைத்துப் பணிகளையும் முடித்து ஏற்கனவே வரும் ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்றோம். எங்கள் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனுக்கு மணி மகுடமாகவும் அவரது ரசிகர்களுக்கான திரைப்படமாக லாபம் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

image


Advertisement

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close