இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஷிகர் தவான் 4, கே.எல்.ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலியும் 5 பந்துகளை சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.
டெஸ்ட் தொடரில் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 23 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் மட்டும் நிதானமாக விளையாடி 48 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 21 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து நடையை கட்டினார். ஷர்துல் தாகூர் டக் அவுட் ஆக, இறுதியில் வாஷிங்டன் சுந்தர் 3, அக்ஸர் படேல் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து, 125 ரன்கள் என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடியது. அந்த அணியில் ஜோஸ் பட்லர், ஜேஸன் ராய் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பட்லர் 28 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்த போதும், ஜேஸன் ராய் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசித் தள்ளினார். அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 49 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் ஒரு ரன்னில் அவர் அரைசதத்தை கோட்டை விட்டார். இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களிலேயே 130 ரன்கள் எடுத்து வெற்றியை பதிவு செய்தது. இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் 24(20), ஜான்னி பேரிஸ்டோவ் 26(17) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்று முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி மார்ச் 14 ஆம் தேதி இதே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி