[X] Close >

'தமிழகத்தின் மருமகன்'... ஸ்போர்ட்ஸ் தொகுப்பாளர் சஞ்சனாவை மணக்கிறாரா பும்ரா?

Various-media-reports-Jasprit-Bumrah-will-be-marrying-sports-presenter-Sanjana-Ganesan

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா. தனிப்பட்ட காரணங்களால் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டுக்குப் பிறகு பும்ரா இந்திய அணியில் இருந்து விடுப்பு எடுத்துள்ளார். மார்ச் 12 முதல் தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கும் பும்ரா தேர்வு செய்யப்படவில்லை. பும்ரா திடீரென விடுப்பு எடுத்து குறித்து சில தகவல்கள் சுற்றி வருகின்றன. அது, வரும் 14-ம் தேதி கோவாவில் வைத்து அவர் திருமணம் செய்யப்போகிறார் என்கிற தகவல்தான்.


Advertisement

இந்தச் செய்தி வெளியான உடனேயே, பும்ரா யாரை திருமணம் செய்ய போகிறார் என்று நெட்டிசன்கள் மணமகள் குறித்து பேசத் தொடங்கினர். அப்படி அவர்கள் அனைவரும் பல ஊடகங்களும் கைகாட்டியது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட விளையாட்டு சேனல்களில், பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் தொகுப்பாளராக பணியாற்றிய சஞ்சனா கணேசன் என்பவரைத்தான்.

ஆனால் பும்ரா தரப்பும், சஞ்சனா தரப்பும் இந்த தகவலை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. அதேநேரத்தில், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துடன் பேசிய பி.சி.சி.ஐ.யின் வட்டாரங்கள், பும்ரா விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதை உறுதிப்படுத்தியுள்ளன, அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கவே மார்ச் 12 முதல் தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கும் பும்ரா தேர்வு செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளன. தற்போது அகமதாபாத்தில் உள்ள பும்ரா, தனது தாய் மற்றும் சகோதரியுடன் முதலில் மும்பைக்கு பயணம் செய்யவுள்ளார். பின்னர் அங்கிருந்து கோவாவுக்கு செல்ல இருக்கிறார் என்று கூறப்படுகிறது.


Advertisement

image

கோவிட் -19 தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக சில குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என்று வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. தொடர்ச்சியான தொடர் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக இந்தியா அணி வீரர்கள் திருமணத்தில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

சஞ்சனா கணேசன் யார்?


Advertisement

பும்ரா திருமணம் செய்ய இருப்பதாக சொல்லப்படும் 28 வயதான சஞ்சனா கணேசன் ஒரு தமிழ்ப் பெண். இவரின் தந்தை கணேசன் ராமசாமி தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். ஆனால், தற்போது இருப்பது எல்லாம் மகாராஷ்டிராவின் புனேவில்தான். விளையாட்டு தொகுப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளராக உள்ளார் சஞ்சனா. ஐபிஎல் போட்டிகளுக்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பிரபலமான ரியாலிட்டி ஷோவான எம்டிவி ஸ்ப்ளிட்ஸ்வில்லா 7 மூலம் சஞ்சனா கணேசன் தொலைக்காட்சியில் அறிமுகமானார். இருப்பினும், காயம் காரணமாக அவர் நிகழ்ச்சியிலிருந்து விலக வேண்டியிருந்தது.

image

இதேபோல் 'தி நைட் கிளப்' என்று பெயரிடப்பட்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணிக்காக சஞ்சனா கணேசன் பிரத்யேக நிகழ்ச்சிகளை வழங்கினார், அங்கு கே.கே.ஆர் ரசிகர்கள் அணியைப் பற்றி பேசவும் பேசவும் வாய்ப்பு கிடைக்கிறது.

கே.கே.ஆர் இணை உரிமையாளர் ஷாருக்கானும் இந்த நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்துகொண்டுள்ளார். தொகுப்பாளராக இருப்பதற்கு முன்பாக சஞ்சனா கணேசன் மாடலிங் செய்து வந்தார். '2012 ஃபெமினா ஸ்டைல் திவா' பேஷன் ஷோவில் பங்கேற்றிருக்கிறார். 2013 ஆம் ஆண்டில் ஃபெமினா மிஸ் இந்தியா புனே போட்டியில் பங்கேற்று இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார். அதேபோல் 2014 மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளராகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close