சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் கோவிட் -19 தடுப்பூசி சான்றிதழ்களில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் அளித்த புகாரின் பேரில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் (எம்.சி.சி) நடைமுறையில் இருப்பதால், பிரதமர் படத்தை நீக்கவேண்டும் என திரிணாமூல் அகாங்கிரஸ் கட்சி புகார் அளித்தது. எனவே தேர்தல் ஆணையம், இதனை வலியுறுத்தி சுகாதார அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேற்கு வங்கம், அசாம், கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் விநியோகிக்கப்படும் தடுப்பூசி சான்றிதழ்களில் இது தொடர்பான வழிமுறைகளை அமல்படுத்த அமைச்சகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.
தேர்தல் ஆணையத்துக்கு சுகாதார அமைச்சகம் அளித்த பதிலில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டது என தெரிவித்தது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க, சுகாதார அமைச்சகம் இப்போது அதன் மென்பொருளை புதுப்பிக்க வேண்டும், இது ஒரு வடிகட்டியை அறிமுகப்படுத்துகிறது, இதன்மூலம் பிரதமரின் படத்தை சான்றிதழில் மறைக்கலாம்.
தேர்தல்களின்போது அரசாங்க திட்டங்களின் சுவரொட்டிகள் மற்றும் அதிகாரபூர்வ வலைத்தளங்களில் பிரதமரின் படத்தைப் பயன்படுத்துவதை தேர்தல் ஆணையம் கடந்த காலத்தில் தடைசெய்தது.
கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகண்ட் மற்றும் உத்தரப் பிரதேச மாநில தேர்தல்களின்போது, பிரதமர் மோடி மற்றும் அப்போதைய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சரின் படங்களை பிரதான் மந்திரி அவாஸ் யோஜனாவின் இணையதளத்திலிருந்து அகற்றுமாறு தேர்தல் ஆணையம் அமைச்சரவை செயலாளரிடம் கோரியிருந்தது குறிப்பிடத்தகது.
Loading More post
டெல்லி: ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 24 மணிநேரத்தில் 25 நோயாளிகள் பலி; அபாயத்தில் 60 பேர்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா? - கருத்துக்கேட்பில் வாக்குவாதம்
"கொரோனா 2-ஆம் அலையில் நுரையீரல் பாதிப்புகள் முன்கூட்டியே தொடக்கம்"- மருத்துவர்கள்
தமிழகத்தில் வசிக்கும் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்தது கனடா
கோவிஷீல்டு விலை உயர்வு: கொரோனா தடுப்பூசி சந்தையில் பொதுமக்களுக்கு சுமையா? - ஒரு பார்வை
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
’cowin’... 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பதிவுசெய்யும் முறை