(மாதிரிப்படம்)
காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயற்சி செய்த இளைஞரை யானை தாக்கியது. இதில் இளைஞர் உயிரிழந்தார்
மனிதனுக்கு நெருக்கமான காட்டு விலங்கு ஒன்று இருக்கமென்றால் அது யானைதான். ஆதிகாலத்தில் இருந்தே சமவெளிகளில் யானையுடன் மனிதனே இணைந்தே வாழ்ந்து வந்துள்ளான் என்பதற்கு இலக்கியங்கள் உதாரணமாகவும் சாட்சியாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட யானைகளை கொண்டாடும் நிலத்தில்தான் சோகங்களும் நடந்து வருகின்றன.மனிதன் செய்யும் தவறுகள் விலங்குகளை அதன் சுபாவத்தில் இருந்து மாற்றுகின்றன. இந்நிலையில் காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயற்சி செய்த இளைஞரை யானை தாக்கியது.
(மாதிரிப்படம்)
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள குத்யாரி கிராமத்தில் மனோகர் படேல் என்ற இளைஞரும் அவரது நண்பர்கள் 3 பேரும் காட்டுப்பகுதியில் வலம் வந்துள்ளனர். அப்போது அங்கு நின்றிருந்த காட்டுயானையுடன் செல்ஃபி எடுத்துள்ளனர். திடீரென அவர்களை காட்டுயானை துரத்தியுள்ளது. நான்கு பேரும் காட்டுயானையிடம் இருந்து தப்பித்து ஓடியுள்ளனர். ஆனால் மனோகர் யானையின் பிடியில் சிக்கி உயிரிழந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மனோகரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
காட்டு விலங்கு தாக்கி உயிரிழந்த மனோகரின் குடும்பத்துக்கு வனத்துறை ரூ.25,000 நிவாரணம் வழங்கியுள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள வனத்துறை, மனோகரைத் தாக்கிய பெண் யானை கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் மூதாட்டி ஒருவரை தாக்கியது. அந்த பெண் யானை தன் குட்டியை பிரிந்து மன உளைச்சலில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அதனால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
Loading More post
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
'அந்நியன் கதை எனக்கே சொந்தம்’!- இயக்குநர் ஷங்கர் விளக்கம்!
செங்கல்பட்டில் கோவாக்சின் தயாரிக்க திட்டம்: பாரத் பயோடெக் உடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!