சேலத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மத்திய சிறையில் இருந்த விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். சேலத்தில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வந்த இவர், 17 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.
அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அசோக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அசோக்குமார் ஜாமீன் கேட்டு நீதி மன்றத்தின் மனு செய்ததாகவும் ஆனால் ஜாமீன் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது. வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் சிறையிலேயே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அசோக்குமாரின் சடலத்தை மீட்ட சிறைத்துறை காவலர்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்களா? இதோ இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்
திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது - கே.எஸ்.அழகிரி
பாஜகவுக்கு கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதி : அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு நிறைவு?
கலங்க வைக்கும் தேவாவின் கணீர் குரல் - மண்வாசம் வீசும் கர்ணனின் ’பண்டாரத்தி புராணம்’ பாடல்!
வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?