தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடங்கவிருப்பதாகவும், தென்தமிழகத்தில் அதிக அளவில் காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது என்றும் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைக் கூறிய அவர் “வரும் 24ஆம் தேதி கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி, சுர்ஜிவாலா உள்ளிட்ட தலைவர்கள் தமிழகம் வருகிறார்கள். காங்கிரஸ் கமிட்டியில் ஆலோசனை முடித்த பிறகு 25-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு கனிமொழியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்கள். அப்போது தொகுதி பங்கீடு குறித்து ஆலோசிக்கப்படும். தொகுதிப் பங்கீடு முடித்தபிறகு ஸ்டாலின், ராகுல்காந்தி ஆகியோர் பங்கேற்கும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எத்தனை இடங்கள் போட்டியிடுவது என்பது அப்போது ஆலோசிக்கப்படும். தென்தமிழகத்தில் அதிக அளவில் காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது “என தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில் “பேச்சுவார்த்தை விரைவில் முடிந்துவிடும் என்று நம்புகிறோம். காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் எனும் ஊகத்தை நான் வெளியில் சொல்வது நியாயமல்ல. ஏனெனில், பேசுவதற்கு மூத்த தலைவர்கள் வர உள்ளனர். திமுக தலைவர்களுடன் பேச தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருடன் நானும் செல்லவிருக்கிறேன்“ என்றார்.
Loading More post
மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா!
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'' - சரத்குமார் பேட்டி
புதுக்கோட்டை: தனியார் பேருந்துகள் 3 மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்... அதிகாரிகள் ஆய்வு!
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
பெட்ரோல் டீசலுக்கு லோன் தாங்க.. வங்கியில் மனு கொடுத்த இளைஞர்கள்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'