ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ் மற்றும் நவோமி ஒசாகா ஆகியோர் மோதுகின்றனர்.
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், 2-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவைச் சேர்ந்த சிமோனா ஹாலெப்பை எதிர் கொண்டார்.
இதில் செரீனா வில்லியம்ஸ் சிறப்பாக விளையாடினார். இதனால் இரண்டு செட்களையும் 6-3, 6-3 என எளிதாக கைப்பற்றி ஹாலெப்பை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். செரீனாவுக்கு இது 9-வது அரையிறுதியாகும். ஒட்டுமொத்தமாக கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 40-வது அரையிறுதியாகும்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் 3-ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா, தைவான் வீராங்கனை சியேஹ் சு-வெய்யை எதிர்கொண்டார். இதில் நவோமி ஒசாகா 6-2, 6-2 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போது நடைபெற இருக்கும் அரையிறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் மற்றும் நவோமி ஒசாகா ஆகியோர் மோத இருக்கின்றனர்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி