ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ராம்பாக்கம் தனியார் உணவு தயாரிப்பு தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 குடும்பத்தினருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் வழங்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ராம்பாக்கம் பகுதியில் தனியார் உணவு தயாரிப்பு நிலையத்தில், இன்று காலையில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியின்போது விஷவாயு தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். இது குறித்து தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார், அதில் இச்சம்பவத்தில் பாக்கியராஜ் , முருகன் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்தேன். அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இச்சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார். மேலும் உயிரிழந்த 3 நபர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!