80 வயது முதியவர் ஒருவர் 29 வயது இளம்பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இது காதல் மாதம். ஆம், காதலர் தினம் வரும் மாதம் என்பதால் பிப்ரவரி தொடங்கினாலே பலருக்கும் காதல் குறித்த நினைவலைகள் வந்துவிடும். சிலர் தான் காதலிக்கும் நபரிடம் எப்படி காதலை சொல்லலாம் என்று திட்டமிட தொடங்குவார்கள். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் காதலியுடன் எப்படி காதலர் தினத்தை கொண்டாடலாம் என்று திட்டமிடுவார்கள். சிலர் தங்கள் கடந்த கால காதல் நினைவுகளை அசை போடுவார்கள். பலருக்கும் பல விதத்தை காதலர் தினம் நினைவுகளை தூண்டிக்கொண்டே இருக்கும். அதுவும் இன்னும் சில தினங்களே காதலர் தினத்திற்கு உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் காதல் நிரம்பியே கிடக்கிறது. அப்படிதான் தென்னாப்பிரிக்காவிருந்து ஒரு காதல் கதை இணையத்தை ஆட்கொண்டது. ’காதலுக்கு கண் இல்லை’ என்று சொல்வார்களே அப்படியான ஒரு காதல் கதை தான் அது.
தென்னாப்பிரிக்க நாட்டின் கேப்டவுன் நகரத்தில் வசிக்கும், 29 வயதாகும் இளம்பெண்ணின் பெயர் டெர்சல் ராஸ்மஸ். சட்டக் கல்லூரியில் படித்துக்கொண்டே உள்ளூர் பத்திரிக்கையொன்றில் வேலை செய்துவருகிறார். கடந்த 2016 - ம் ஆண்டு, உள்ளூர் செய்தித்தாள் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள டெர்செல் ராஸ்மஸ் சென்ற போது 80 வயதான வில்சன் ராஸ்மஸ் எனும் முதியவரை சந்தித்துள்ளார். எப்படியோ இருவருக்குமிடையில் காதல் மலர்ந்துள்ளது. என்ன 80 வயது நபர் மீது 29 வயது பெண்ணிற்கு காதலா! கேட்பதற்கு கொஞ்சம் ஷாக் ஆகத்தான் இருந்திருக்கும். ஆனால், காதலுக்குதான் கண்.. காது..மூக்கு எதுவும் இல்லையே. வயதை தாண்டி இருவருக்கும் இடையே ஏதோ ஒரு இடத்தில் மனது ஒத்துப்போய் இருக்கிறது. மனசு ஒத்துப்போவதுதானே காதல்.
இதையடுத்து டெர்சலும் வில்சனும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். ஒத்த வயதுடையவர்கள் காதலித்தாலே அவர்களுக்கு பலப்பல பிரச்னைகள் வரும். சில நேரங்களில் அவர்களே அவர்களுக்கு பிரச்னையாகி பிரிந்துவிடுவார்கள். அப்படியில்லையென்றால் சமூகத்தில் ஏதேனும் ஒரு சிக்கல் வந்து அவர்களை பிரித்துவிடும். ஆனால், இவ்வளவு வயது வித்தியாசம் இருந்தாலும் எப்படியும் திருமணம் செய்துகொண்டே ஆக வேண்டும் என்று இந்த ஜோடி முடிவு எடுத்துள்ளது.
இருவரும் சென்று டெர்சலின் தாயிடம் சென்று தங்கள் காதல் விவகாரத்தை சொல்ல, அதைக் கேட்டதும் அவர் கோபமடைந்துள்ளார். அப்போது அந்த தாயின் ரியாக்ஷனை கொஞ்சம் நாம் கற்பனை செய்துபார்த்தால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும் (அப்படியே ஷாக் ஆயிட்டே மொமண்ட்...). ஏனெனில், டெர்சலின் தாயை விடவும் வில்சன் சுமார் 24 வருடங்கள் மூத்தவராவார். அதன் பிறகு, அந்த தாய்க்கு காதல் ஜோடி இருவரும் ‘காதலுக்கு வயதில்லை’ என்பதை புரிய வைத்து திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளச் செய்தனர்.
இதையடுத்து சமீபத்தில் டெர்சலும் வில்சனும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமண போட்டோக்கள்தான் வைரல். இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் வில்சனின் 56 வயதான மூத்த மகள்தான் இருவரின் திருமணத்துக்கும் சாட்சிக் கையெழுத்துப் போட்டுள்ளார். தற்போது திருமணமான ஜோடி இருவரும் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். டெர்சனின் படிப்பு செலவுகளை வில்சன் நிதி உதவி செய்துவருகிறார்.
Loading More post
அரை சதம் விளாசிய ரோகித் - கடைசி ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்த கோலி!
”தமிழர்களின் துடிப்பான பண்பாடு உலக அளவில் புகழ் பெற்றது” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
பாலியல் புகார் எதிரொலி : கட்டாய காத்திருப்பு பட்டியலில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி!
ஆறு விக்கெட்டுகளை அள்ளிய அக்ஸர் பட்டேல் - இங்கிலாந்து 112 ரன்னில் ஆல் அவுட்!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!