தேர்தல் முடிவுகளைப் பார்த்ததும் மம்தாவும் ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை எழுப்புவார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியுள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கூச்பேஹரில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ‘’ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்தை அவமானமாக மம்தா பானர்ஜி கருதுகிறார். பலரும் இந்த கோஷத்தால் பெருமிதம் அடைகிறார்கள். ஆனால் மம்தா மட்டும் ஏன் அவமானமாகக் கருதுகிறார். ஏனென்றால் இங்குள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவினரை வாக்குகளை வாங்க வேண்டும். தேர்தல் முடிவுகளைப் பார்த்ததும் அவரும் ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை எழுப்புவார். இந்த ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை இங்கு எழுப்பாமல் பாகிஸ்தானுக்கு சென்றா எழுப்ப முடியும்.
130-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள், திரினாமுல் காங்கிரஸ் KADCHIYI குண்டர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், கொலைகாரர்கள் ஒவ்வொருவரும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். மோடியுடன் எப்போதும் மம்தா சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்.
மம்தாவின் முழு கவனமும் அவரது மருமகனை அடுத்த முதல்வராக்குவதிலேயே உள்ளது. திரிணாமுல் காங்கிரசில் தற்போது சில முக்கிய தலைவர்கள் இல்லாமல் போயிருந்தால், மம்தா தனது மருமகனையே அடுத்த முதல்வராக அறிவித்திருப்பார். இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் உள்ளார்" என்று பேசினார்.
Loading More post
''கூட்டணி பற்றி கமலிடம் பேசினோம்; நல்ல முடிவு வரும்'': சரத்குமார் பேட்டி
மநீம - சமக - ஐஜேகே கூட்டணி? கமலுடன் சரத்குமார் சந்திப்பு!
சட்டப்பேரவை தேர்தல்: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 தொகுதிகள்?
''குளிர்காலம் முடிவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்'': பெட்ரோலியத்துறை அமைச்சர் விளக்கம்
நைஜீரியாவில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை கடத்திய பயங்கரவாதிகள்!
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'