[X] Close >

”உங்கள் ஹீரோக்களை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள்” -நடிகர் சித்தார்த்

-Choose-your-heroes-wisely-----Actor-Siddharth

விவசாயிகள் போராட்டத்திற்கு வெளிநாட்டு பிரபலங்கள் தெரிவித்த கருத்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்த கருத்தை எதிர்த்து நடிகர் சித்தார்த் “உங்கள் ஹீரோக்களை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.


Advertisement

விவசாயிகளுக்கு ஆதரவாக ஜஸ்டின் ட்ரூடோ,கிரேட்டா தன்பெர்க், ரிஹானா உள்ளிட்ட வெளிநாட்டு பிரபலங்கள் தெரிவித்த கருத்துக்கு இந்தியாவில் சச்சின், விராட் கோலி,ரெய்னா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில்,  நடிகை டாப்ஸி ட்வீட் மூலம் இன்று இந்திய கிரிக்கெட் வீரர்களின் கருத்துகளை எதிர்த்து கேள்வியெழுப்பியிருந்தார்.  

image


Advertisement

இந்நிலையில், நடிகர் சித்தார்த். “உங்கள் ஹீரோக்களை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுங்கள் அல்லது அவர்கள் இரக்கத்திலிருந்து விழுவதைப் பாருங்கள். கல்வி, இரக்கம், நேர்மை ஆகியவை ஒரு நாளைக் காப்பாற்றியிருக்கலாம். அதிகாரத்தில் உள்ளவர்கள் எந்த ஒரு முடிவையும்  எடுக்காமல் மற்றவர்களுடன் பப்பட் ஷோவிலுள்ள பொம்மைகளைப்போல் ஒன்றுகூடி ஒரேமாதிரி ஊதுகிறார்கள். அப்படித்தான், இந்த பிரச்சாரமும்” என்று கருத்திட்டுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close