சூர்யா தயாரிப்பில், நடிகர் அருண் விஜய் மகன் அர்னவ்வின் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் நடிகர் அருண் விஜய் இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜய்குமாரின் பேரனும் நடிகர் அருண் விஜய் மகனுமான அர்னவ், நடிகர் சூர்யா தயாரிக்கும் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாக உள்ளார். முழுக்க முழுக்க ஊட்டியில் படமாக்கப்படும் இந்தப்படத்தை இயக்குநர் சரவ் சண்முகம் இயக்குகிறார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் அர்னவிற்கு தந்தையாக அவரது தந்தை நடிகர் அருண் விஜய் நடிக்க உள்ளார்.
இது குறித்து இயக்குநர் சரவ் சண்முகம் கூறும்போது, “ இந்த கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடிப்பாரா எனும் சந்தேகத்துடன் தான் முதலில் அவரை அணுகினேன். அவர் இந்தப்படத்தில் அர்னவிற்காக மட்டுமென்றால் நான் நடிக்க மாட்டேன என்று அவர் முன்பே கூறியிருந்தார். ஆகையால் கதாபாத்திரத்தை ஒப்புக் கொள்வதற்கு முன்னால் கதாபாத்திரம் குறித்து நிறைய தெரிந்து கொண்டார்
நான் திரைக்கதையை கூறிய பிறகு அந்த கதாப்பாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஒப்பந்தமாவதற்கு முன்னால் தனது கதாப்பாத்திரம் குறித்து நிறைய கேட்டு தெரிந்து கொண்டார். தற்போது ஊட்டியில் எங்களுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். படம் உருவாகி வரும் விதம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அர்னவ் மிகவும் துறுதுறுப்பான, உற்சாகம் கொண்ட திறன்மிகு நடிகர். இயல்பாகவே அவரிடம் நடிப்பு திறன் நிறைந்திருக்கிறது” என்றார். இந்தப் படம் அருண் விஜயின் 32 வது படமாகும்.
Loading More post
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் ஆன்லைன் மூலம் மட்டுமே வழக்கு விசாரணை!
மீண்டும் ஈ.வெ.ரா சாலையான கிராண்ட் வெஸ்டர்ன் டிரங்க் ரோடு - நள்ளிரவில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொட்டித் தீர்த்த கோடை மழை!
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!