மக்கள் மனத்தில் இருப்பதை அறிந்துகொள்ளவே இங்கு வந்ததாகவும், தமிழக இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலம் காத்திருப்பதாகவும் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் இரண்டாவது நாள் பரப்புரை பயணத்தை தொடங்கிய ராகுல்காந்திக்கு ஊத்துக்குளியில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெருந்துறை அருகே காமராஜர், ஈ.வி.கே சம்பத் சிலைகளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அரசு மருத்துவமனை சந்திப்பு பகுதியில் உள்ள பெரியார், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் சிலைக்கு மலர் தூவிய அவர், ஓடாநிலை பகுதியில் உள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தார்.தொடர்ந்து பல்வேறு இடங்களில் திறந்தவேனில் பரப்புரை மேற்கொண்டார்.
இதனையடுத்து அப்பகுதியில் சமுதாயநலக்கூடத்தில் நெசவாளர்களுடன் அவர் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது நூல் விலையை அரசு நிர்ணயம் செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்த நிலையில், இவை தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பவுள்ளதாக கூறினார்.
மேலும் நெசவாளர்களுடன் அமர்ந்து சாதம், முருங்கைக்காய் சாம்பார், காய்கறி கூட்டு, பொறியலுடன் உணவு உண்டார். அங்கிருந்து காங்கேயம் பகுதியில் திறந்த வேனில் பரப்புரை மேற்கொண்ட அவர் மத்திய அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பின்னர் பரப்புரை இடத்திற்கு அழைத்துவரப்பட்ட காங்கேயம் காளையை ராகுல்காந்தி தொட்டுப்பார்த்தார்.
Loading More post
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ