[X] Close >

போராடும் விவசாயிகள் அமைதிகாக்க உச்சநீதிமன்றம் வேண்டுகோள்

Supreme-court-asks-farmers-to-Maintain-Peace

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள் அமைதி காக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது


Advertisement

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பான வழக்கில், 3 வேளாண் சட்டங்களுக்கும் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. மேலும் இந்த சட்டங்களை ஆய்வு செய்ய 4 உறுப்பினர்கள் கொண்ட குழுவையும் உச்சநீதிமன்றம் நியமித்தது. இதனிடையே 4 உறுப்பினர்களில் ஒருவரான புபீந்தர் சிங் மான், குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில் போராடி வரும் விவசாயிகள் அமைதி காக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேசமயம் வேளாண் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் விவசாயிகள் போராட்டத்தை மீண்டும் தொடரலாம் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட 4 பேர் கொண்ட குழுவில் இருந்து பி.எஸ்.மான் வெளியேறியதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தியும் தெரிவித்தார்.


Advertisement


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close