''இனவெறி தொடர்பான கருத்துக்கு முகமது சிராஜ் மற்றும் இந்திய அணியினரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன்'' என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் பதிவிட்டுள்ளார்
சிட்னி டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை நிற வெறியை ஏற்படுத்தும் நோக்கில் அந்நாட்டு ரசிகர்கள் கேலி பேசினர். சிராஜை திட்டியவர்கள் மது குடித்து இருந்ததாகவும் சொல்லப்பட்டது. சிராஜ் நிற வெறிக்கு ஆளானதை அறிந்த சீனியர் வீரர்களும், அணியின் கேப்டன் ரஹானேவும் களத்தில் நின்ற நடுவர்களிடம் புகார் கொடுத்தனர்.
நிறவெறி கருத்துக்கு இந்திய அணி வீரர்கள், முன்னாள் வீரர்கள், பிசிசிஐ, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் என பல தரப்பும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில், ஆஸி கிரிக்கெட் வீரர் வார்னரும் தன்னுடைய வருத்தத்தையும், கண்டனத்தையும் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், ''இனவெறி தொடர்பான கருத்துக்கு முகமது சிராஜ் மற்றும் இந்திய அணியினரிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். துஷ்பிரயோகம் எந்த வகையிலும் எந்த நேரத்திலும் ஏற்றுக்கொள்ளவோ அல்லது பொறுத்துக்கொள்ளவோ முடியாது. ஆஸ்திரேலிய மக்களிடம் இருந்து சிறப்பான ஒன்றையே எதிர்பார்க்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்
Loading More post
அறுவைசிகிச்சைக்காக சில நாட்கள் ஓய்வு: கமல் அறிவிப்பு
"தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு” -சென்னை வானிலை ஆய்வு மையம்
செங்கல்பட்டு டோல்கேட்: கூட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்
பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!